உலகில் துன்பப்படும் மக்களின் துன்பத்தைப் போக்க உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பு ரெட் கிராஸ். இதில் 100க்கு மேற்பட்ட தேசிய ரெட் கிராஸ் சங்கங்கள் மற்றும் செம்பிறை சங்கங்கள் உள்ளன, இவர்கள் உயிர்களைக் காப்பாற்றவும், சமூகப் பின்னடைவைக் கட்டியெழுப்பவும், உள்ளூர்மயமாக்கலை வலுப்படுத்தவும், உலகம் முழுவதும் கண்ணியத்தை மேம்படுத்தவும் வேலை செய்கிறார்கள்.
பைட்டோதிங்க்(PHYTOTHINK) ரெட் கிராஸ் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் வரலாறு, உலக / உள்ளூர் அளவில் அதன் அமைப்பின் செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் செய்திகளை மக்களுக்கு அறியசெய்து தன்னார்வ சமூகத்தை உருவாக்குவது, இதன் மூலம் ரெட் கிராஸ் மற்றும் செம்பிறை சங்கங்களின் வளர்ச்சிக்கு உதவுவதே எங்களது முக்கிய நோக்கமாகும். எங்களது முக்கிய பணி ரெட் கிராஸ் மற்றும் செம்பிறை சங்கங்களின் செய்திகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை இணைய வழியில் மக்களுக்கு வழங்குவது.
நாங்கள் எந்த ரெட் கிராஸ் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களுக்கு கீழ் இயங்கவில்லை. நாங்கள் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள். நாங்கள் தெய்வத்திரு.ஹென்றி டியூனாண்ட் அவர்களை முழுமையாக ஏற்று அவர் வழியில் பயணிக்கிறோம்.