History of Junior / Youth Red Cross

 

ஜூனியர் ரெட் கிராஸ் (JRC) வரலாறு


உலகில் ஜூனியர் ரெட் கிராஸ் துவங்குவதற்கு மூன்று நிகழ்வுகள் அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.


நிகழ்வுகள் - 1

1884 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள ஓகையோ (Ohio) என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு உதவ ஆறு சிறுவர்களும், ஆறு சிறுமியர்களும் சேர்ந்து தங்களால் முடிந்த பணத்தைச் சேமித்து, அந்நாட்டு ரெட் கிராஸைத் தோற்றுவித்த கிளாராபர்டன் (Clara Berton) அவர்களுக்கு அனுப்பி வைக்க, அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு உதவும்படி அனுப்பி வைத்தனர். அவர் அதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை விதவைக்கு அனுப்பினார். இதன்பயனாக, ஒரு குடிசை அமைக்கப்பட்டு அதன் மேல் Little Six Red Cross Landing என எழுதப்பட்டிருந்தது.


நிகழ்வுகள் - 2

1899 ஆம் ஆண்டு முதல் 1902ஆம் ஆண்டு வரை நடந்த போயர் (Boer) யுத்தத்திற்கு கனடா நாட்டு வாலிபர்கள் ஒரு குழு அமைத்து தங்களால் முடிந்த உதவிகளை கனடா நாட்டு ரெட் கிராஸிற்கு கொடுத்து உதவினர். மேலும் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவெனில், நம் தேசப்பிதாவாகிய மகாத்மா காந்தி அவர்கள் தன் இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் நடத்த யுத்தத்தின் போது ஒரு ரெட் கிராஸ் தன்னார்வமிக்கத் தொண்டனாக சேவை புரிந்தார்.


நிகழ்வுகள் - 3

கனடாவிலுள்ள கியூபெக் மாகாணத்தில் பள்ளிப்பிள்ளைகள் சிலர் முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், காயம்பட்ட வீரர்களுக்குப் பயன்படும் கட்டுகள், துணிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் பொருட்களைச் சேகரித்து அனுப்பினர். இவ்வெண்ணம் 1915 ஆம் ஆண்டுக்குள் பல பகுதிகளுக்கும் பரவிற்று. முதல் உலகப் போருக்கு பிறகு ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) பல பள்ளிகளில் துவங்கக் காரணமாயிற்று.


இந்தியாவில் ஜூனியர் ரெட்கிராஸ் 

ஜூனியர் ரெட் கிராஸ் நோக்கமும், கொள்கைகளும் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துவதுடன் அவர்களுடைய ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் என அறிந்த கல்வியாளர்கள் இதைப் பள்ளிகளில் ஏற்படுத்தினர். 1920 ஆம் ஆண்டுக்குள் இது உலகம் முழுவதும் பரவிற்று. இன்றைக்கு உலகில் ஏறத்தாழ 176 நாடுகளில் ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) இயங்கி வருகிறது. இந்தியாவில் முதன்முதலில் ஜே.ஆர்.சி. 1926 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் துவக்கப்பட்டு, படிப்படியாகப் பரவி டெல்லி முதலான பல மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக நடைபெறுகிறது. 1953 டிசம்பர் திங்கள் தமிழ்நாட்டில் ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) துவங்கப்பட்டது.



யூத் ரெட் கிராஸ் (YRC) வரலாறு


1920 ஆம் ஆண்டு, இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் நிறுவப்பட்டதிலிருந்து இளைஞர்களுக்கான யூத் ரெட் கிராஸ் (ஒய்.ஆர்.சி) செயல்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்தக் யூத் ரெட் கிராஸ் 18 முதல் 25 வயதுடைய கல்லூரி மாணவர்கள் தன்னார்வமிக்கத் தொண்டனாக சேவை செய்வார்கள்.


"நான் சேவை செய்கிறேன்" 
(சுகாதாரம், சேவை மற்றும் நட்பு) 





To Top